``கமல் நொடிக்கு நொடி மாற்றிப் பேசுகிறார்" - துணை முதல்வர் பன்னீர்செல்வம் விமர்சனம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமையும் என்று கூறினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

ஓ.பன்னீர்செல்வம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகளை அதிகாரபூர்வமற்ற முறையில் இப்போதே தொடங்கியுள்ளது அ.தி.மு.க. இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், பின்பு  செய்தியாளர்களிடம் பேசும்போது, ``வெற்றி மீது வெற்றி தரும் முருகனை தரிசிக்க வந்திருக்கி்றேன். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் அறிவித்தவுடன் வெற்றி பெறுவதற்கான பணிகள் தொடங்கும். அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். அது அவருடைய கருத்து. ஒரு குடும்பத்தை எதிர்த்து அ.தி.மு.க-வில் மிகப்பெரிய தர்ம யுத்தம் நடத்திய பிறகு தொண்டர்களுடைய ஆதரவுடன் அ.தி.மு.க அரசு  செயல்பட்டு வருகிறது. மீண்டும் கட்சியை ஒரு குடும்பத்திடம் ஒப்படைக்க கட்சியினர் தயாரில்லை" என்றவரிடம்,  இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளது தொடர்பாக கேட்டதற்கு, ``அவர் நொடிக்கு நொடி தனது கருத்தை மாற்றிப் பேசி வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி முதல்வர் முடிவு செய்வார். அ.தி.மு.க தலைமையில்தான்  கூட்டணி அமையும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!