20 நாள்களுக்குப் பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

ழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளதால், 20 நாள்களுக்குப் பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் சங்கமம், புகழ்வாய்ந்த கோயில்கள், திற்பரப்பு அருவி எனப் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்துக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள், திற்பரப்பு அருவிக்கும் சென்று ஆனந்தமாகக் குளியல்போடுவது வழக்கம். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், குமரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தாமிரபரணி, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியின் அருகில் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.  தற்போது வெள்ளப்பெருக்கு சற்று குறைந்திருப்பதால், குறைந்த அளவு தண்ணீர் விழும் பகுதியில் மட்டும் குளிக்க இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 20 நாள்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி  யடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!