மைக்கில் கூவிக்கூவி காய்கறி விற்ற சமந்தா! - களைகட்டிய ஜாம் பஜார் மார்க்கெட்!

'இரும்புத்திரை' பட விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த நடிகை சமந்தா, ஜாம் பஜார் மார்க்கெட்டில் இறங்கி காய்கறி விற்று, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சிகொடுத்துள்ளார். 

சமந்தா
 

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துவரும் நடிகை சமந்தா, அவ்வப்போது சமூக சேவையிலும் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு, 'பிரத்யூஷா' என்னும் தொண்டு நிறுவனத்தை நிறுவிய சமந்தா, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தன்னால் முடிந்த மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவருகிறார்.  தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சிலவற்றுடன் ஒன்றிணைந்து இந்தச் சேவையைச் செய்துவருகிறார். சமீபத்தில், பிரத்யூஷா தொண்டு நிறுவனம்மூலம் கேரளா வெள்ளத்துக்கும் நிதி திரட்டிக் கொடுத்துள்ளார். 

விஷால், சமந்தா நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்ள சமந்தா சென்னை வந்திருந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம் பஜார் மார்க்கெட்டுக்கு திடீர் விசிட் அடித்த சமந்தா, ஒரு பெண்ணின் காய்கறிக் கடையில் அமர்ந்து, கூவிக்கூவி காய்கறி விற்கத் தொடங்கினார். மார்க்கெட்டுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் சமந்தா அமர்ந்திருந்த கடைக்கு வந்து காய்களை வாங்கினர். சிறிது நேரத்தில், அங்கு கும்பல் கூடியது. காய்களும் விற்றுத் தீர்ந்தன. 

சமந்தா
 

சமந்தா, சிறிய மைக் ஒன்றை அணிந்திருந்தார். கேமராவும் கொண்டு வரப்பட்டிருந்தது. எந்தக் காரணத்துக்காக திடீரென ஜாம் பஜார் மார்க்கெட்டுக்கு அவர் வந்தார் என்று மக்களுக்குக் கடைசி வரை விடை கிடைக்கவில்லை. ஏழை எளிய மக்களுக்கு நிதி திரட்டவே அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, சமந்தாவால் விற்றுத் தீர்த்த காய்கறிகளால், அந்தப் பெண் வியாபாரிக்கு ஒரு நல்லது நடந்திருக்கிறது!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!