வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (31/08/2018)

கடைசி தொடர்பு:17:53 (31/08/2018)

ஃபேஸ்புக் நேரலையில் பி.ஜெ! - பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம்

பிஜெ

தமிழக இஸ்லாமிய அமைப்புகளில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்ட விவகாரம். பெண்ணுடன் கைப்பேசியில் தவறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தவ்ஹீத் ஜமாத்தின் அத்தனைப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் 'பிஜெ' என அழைக்கப்படும் ஜெய்னுல் ஆபிதீன். அப்போது கூடிய தவ்ஹீத் ஜமாத் உயர்மட்டக்குழுவில் இருந்த சிலர், ``பெண்ணுடன் தவறாகப் பேசியதை பி.ஜெ ஒப்புக்கொண்டார். மொத்தம் 46 ஆடியோக்களில் மூன்றுதான் வெளியாகியிருக்கிறது" என்றும் கூறி அதிர வைத்தனர்.

சில மாதங்களாக ஓய்ந்திருந்த பி.ஜெவின் முகநூல் பக்கத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``கொள்கைச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.. இன்ஷா அல்லாஹ் 31-ம் தேதி ஆகிய இன்று இரவு 7:15 மணிக்கு 'PJ அளிக்கும் விளக்கம் எவ்வளவு நேரம் நீடிக்கும், அதற்கேற்ப நாங்கள் தயாராக வேண்டும்' என்று கேட்டு வருகின்றனர். PJ-வின் விளக்கம் 5 மணி நேரத்துக்கும் குறையாமல் அமையும். அதற்கேற்ப நெட் வசதியை ஏற்படுத்திக்கொண்டு நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதன் பின்னணி, ஆடியோ தொடர்பான விளக்கங்களை இந்த முகநூல் லைவ்வில் பிஜெ தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.