`இந்தப் பள்ளிக்கு இனி அனுப்ப மாட்டோம்!'- கொதித்தெழுந்த பெற்றோர்; கைதான டிரைவர் | school van driver arrested near thiruvallur

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (31/08/2018)

கடைசி தொடர்பு:19:40 (31/08/2018)

`இந்தப் பள்ளிக்கு இனி அனுப்ப மாட்டோம்!'- கொதித்தெழுந்த பெற்றோர்; கைதான டிரைவர்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். டிரைவரின் உறவினரான பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மீஞ்சூரை அடுத்த புங்கபேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் 4 வயது  மகள் எல்.கே.ஜி படித்து வருகிறார். மாலையில் வீடு திரும்பியபோது சிறுமி மட்டும் கடைசியாக இறங்குவது வழக்கம். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளி வேனில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, சிறுமியை டிரைவர் பால்பாண்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

டிரைவர் பால்பாண்டிவீட்டுக்கு வந்ததும் வேனில் நடந்த சம்பவத்தை தன் அம்மாவிடம் கூறியுள்ளார். உடனடியாக குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். சிறுமியின் தந்தை மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், டிரைவர் பால்பாண்டி பள்ளியின் தாளாளரின் உறவினர் என்பதால், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்டதும் போலீஸார் இன்று வேன் ஓட்டுநர் பால்பாண்டியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, இன்று பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளியின் நிர்வாகிகளைக் கைது செய்ய வலியுறுத்தி மணலி- மீஞ்சூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி டி.எஸ்.பி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி கூறியதையடுத்து, மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், ``இனிமேல் எப்படி எங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் படிக்க வைக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினர். மேலும், ``பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.


[X] Close

[X] Close