தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர், தொடர்ச்சியாக சிகிச்சையை மேற்கொண்டுவருகிறார். இதற்கிடையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த விஜயகாந்த், 20 தினங்களுக்கு முன்னர்தான் நாடு திரும்பினார்.

பின்னர், தே.மு.தி.க அலுவலகத்தில் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில், தற்போது உடல் நலக் குறைபாட்டால் அவர் சென்னை போருரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார். இதுகுறித்து பேசிய தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ், ``விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிந்த பிறகு, நாளை மதியம் வீடு திரும்புவார்'' என்று தெரிவித்தார்.

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தே.மு.தி.க வெளியிட்ட அறிக்கையில், 'விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தமிழகத் தலைவர் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ட்விட்டர் பதிவில், 'தே.மு.தி.க தலைவர் சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!