மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆவணி அஸ்வதி பொங்காலை!

ண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆவணி அஸ்வதி பொங்காலையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

பொங்காலை

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோயிலில் அம்மன் சுயம்புவாகவே புற்றுவடிவில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாசி மாதம் 10 நாட்கள் நடக்கும், கொடை விழாவில் கேரள மாநில பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அம்மனை வழிபடுவார்கள். மேலும் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அஸ்வதி பொங்காலை மற்றும் சுமங்கலி பூஜை நடத்துவது வழக்கம்.

சுமங்கலி பூஜை

அதன்படி நேற்று மாலை சுமார் 1200 பெண்கள் கலந்துகொண்ட சுமங்கலி பூஜை நடந்தது. இன்று காலை ஆயிரக்கணக்கான பெண்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை சுற்றிப் பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் அம்மனுக்குச் சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைக் கோயில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில் அறநிலையத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!