சேலம் அருகே நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 7 பேர் பலியான சோகம்! | In Salem two bus met with accident

வெளியிடப்பட்ட நேரம்: 07:57 (01/09/2018)

கடைசி தொடர்பு:07:57 (01/09/2018)

சேலம் அருகே நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 7 பேர் பலியான சோகம்!

சேலம் அருகே, இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 

சேலம் விபத்து

சேலம் மாவட்டம் மாங்கம் என்ற பகுதியில், சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை, சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி சென்ற தனியார் பேருந்தும், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்ற சொகுசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரிமீது மோதாமல் இருக்க கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பேருந்தை கடைசி நேரத்தில் திருப்பியது விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தக் கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாயினர். படுகாயம் அடைந்த 20 -க்கும் மேற்பட்டோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. விபத்து நடந்த இடத்துக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  இந்த விபத்தில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.