`சிறுவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது'- தலைமை நீதிபதி ரமணி

சென்னையில், அரசு குழந்தைகள் இல்லத்தில் பல்நோக்கு வள மையத்தைத் தலைமை நீதிபதி தஹில் ரமணி திறந்துவைத்தார்.

தஹில் ரமணி

சென்னை கெல்லீஸ் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில், பல்நோக்கு வள மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி குத்துவிளக்கு ஏற்றித் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜியும் கலந்துகொண்டார்.

இதில் பேசிய தஹில் ரமணி, “குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்காக சென்னை உயர் நீதிமன்றமும்  குழுக்களை அமைத்து ஆலோசனை வழங்கிவருகிறது. நாட்டில் உள்ள 2874  குழந்தைகள் காப்பகங்களில் 54 காப்பகங்கள் மட்டுமே அரசின் அனைத்து வழிகாட்டுதல்களுக்கும் உள்பட்டுச் செயல்படுகின்றன. நாடு முழுவதும்  30 லட்சம் வழக்குகள்  சிறார்கள்மீது உள்ளன. 35 மில்லியன் இந்தியச் சிறுவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படுவதாக ஆய்வு சொல்கிறது. குழந்தை நலக் குழு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குழந்தைகள் இல்லங்களைக் கண்காணித்துவருகிறது. இந்தக் குழு, குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவம், உளவியல் ஆலோசனை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புஉணர்வு போன்றவற்றை வழங்கிவருகிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!