மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் பினராயி விஜயன்!

மருத்துவ சிகிச்சைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். 

பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு செப்டம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் உள்ள மயோ கிளினிகில் சிகிச்சை பெற உள்ளார். இதனால் இன்று காலை தன் மனைவியுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக ஆகஸ்ட் 19-ம் தேதியே அவர் சிகிச்சைக்காக செல்லத் திட்டமிடப்பட்டது. ஆனால் கேரளாவை புரட்டிய எதிர்பாராத வெள்ளத்தினால் இவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 

13 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பினராயி விஜயன், அவருக்கான மருத்துவ சிகிச்சை குறித்தும் அறுவை சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் ஆலோசிக்க உள்ளார். எனினும் இவரின் சிகிச்சை முடிந்த பின்னரே இந்தியா திரும்பும் உறுதியான தகவல் தெரியவரும் என முதல்வர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 

முதல்வர் அமெரிக்க செல்லும் முன் நேற்று முன் தினம் கேரளாவின் முன்னாள் கவர்னர் ஜஸ்டிஸ் சதாசிவத்தை அழைத்து, தான் அமெரிக்கா செல்வது குறித்தும் வெள்ளத்தில் நிலைகுலைந்த கேரளாவின் அடுத்தகட்ட பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று முடிந்துள்ள பணிகள் குறித்தும் விளக்கியுள்ளார். முதல்வர், மாநிலத்தில் இல்லாத காலகட்டத்தில் கேரளாவின் புனரமைப்பு பணிகளைத் தொழில்துறை அமைச்சர் ஜெயராமன் மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!