வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (02/09/2018)

கடைசி தொடர்பு:07:41 (03/09/2018)

ஆவடி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோ சட்டத்தில் கைது!

ஆவடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்பநேசன் என்பவரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

பாலியல் தொல்லஒ கொடித்த இன்பநேசன்

திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி அருகே உள்ளது கோயில் பதாகை கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவர் விமலா. இவருடைய கணவர் 2010-ம் ஆண்டு இறந்து விட்டார். தனியாக இருந்த விமலாவுக்கும் அதே பகுதியில் உள்ள இன்பநேசன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு குழந்தைகளை மாமனார் மாமியார் வீட்டில் விட்டுவிட்டு விமலா இன்பநேசனுடன் ஊரை விட்டு வெளியூர் சென்று விட்டார். 

மீண்டும் 2016-ம் ஆண்டு ஊர் திரும்பிய விமலா, தனது மகனையும் மகளையும் மாமியார் வீட்டில் இருந்து சண்டை போட்டுத் தன்னுடன் அழைத்துச் சென்று தனியாகக் கோயில் பதாகையில் வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் விமலா இல்லாத நேரத்தில், அவரது 13 வயது குழந்தைக்கு இன்பநேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டார். உடனடியாக சிறுமியை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி 5 மாதம் கர்ப்பம் ஆகியுள்ளது தெரியவந்தது.

இந்தக் தகவல் அறிந்த சிறுமியின் தாத்தா ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பெயரில் ஆய்வாளர் ஷோபாராணி வழக்கு பதிவு இன்பநேசனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைந்தனர். இந்தச் சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.