தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி | Thol.thirumavalavan Admitted In Apollo Hospital

வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (03/09/2018)

கடைசி தொடர்பு:08:56 (03/09/2018)

தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உடல் ஒவ்வாமை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் நாம் பேசினோம். அவர் கூறியதாவது, `` கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமாவளவன் கேரளாவுக்குச் சென்று வி.சி.க சார்பாக வெள்ள நிவாரணம் அளித்துவிட்டு வந்தார், அதற்கு முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் சென்று வந்தார். இப்படித் தொடர் பயணத்தின் காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை நன்கு ஓய்வெடுக்கச் அறிவுறுத்தியுள்ளனர். விரைவில் அவர் வீடு திரும்புவார்” எனத் தெரிவித்தார்.