வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (03/09/2018)

கடைசி தொடர்பு:15:10 (03/09/2018)

``மோடியின் மௌனம்தான் ரஃபேல் ஊழலுக்கு ஆதாரம்” - முன்னாள் அமைச்சர் ஜெயபால் ரெட்டி அதிரடி

``மோடியின் மௌனம்தான் ரஃபேல் ஊழலுக்கு ஆதாரம்” என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜெயபால் ரெட்டி

முன்னாள் மத்திய அமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயபால் ரெட்டி இன்று புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கிறார். தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது. போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் ஒரு ரஃபேல் விமானங்களைக் கூட இங்கு தயாரிக்கவில்லை. பிரான்ஸ் நாட்டில் வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்களில் 41 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது. பிரதமர் மோடியின் மௌனம்தான் அந்த மிகப்பெரிய ஊழலுக்கு ஆதாரம். இந்த விவகாரத்தில் மூத்த அமைச்சர்கள் யாரும் மோடிக்கு ஆதரவாகப் பேசவில்லை. காரணம் அமைச்சரவையின் ஒப்புதலை அவர் பெறவில்லை. இந்த ஊழலுக்கு மோடி பதில் சொல்லவில்லை என்றால், அவரது ஆட்சி முடிவுக்கு வரும். இந்த விவகாரத்தைப் பாராளுமன்றக் குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க-வுக்கும் மோடி அரசுக்கும் மக்கள் தகுந்த பதில் கொடுப்பார்கள். மோடி ஒரு கொடுங்கோலர். அவர் கொண்டுவந்த 500 மற்றும் 1000 ரூபாய் பண மதிப்பிழப்பு திட்டத்தால்  நாட்டுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எப்படி ஒரே இரவில் பண மதிப்பிழப்பை செய்ய முடியும்? புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி எப்போதுமே தாறுமாறான ஆள். எப்போதுமே விளம்பரத்துக்காக ஆசைப்படுபவர். அதனால்தான் அவருக்கு டி.ஜி.பி, கமிஷனர் போன்ற பதவிகள் கிடைக்கவில்லை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க