‘எளிமையா பதிவுத் திருமணம் செஞ்சுக்கிட்டோம்..’- புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் டேனி!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த கையோடு, தன் பேச்சிலர் வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டார் டேனி. 

டேனி
 

` ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆகிட்டாப்ள... ' என்ற வைரல் வசனத்தின்மூலம் பிரபலமானவர், நடிகர் டேனியல். இவர், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளராக இருந்தார். ஆனால், இந்த வாரம் நடந்த வெளியேற்றுப் படலத்தில் எலிமினேட் ஆகி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில்  பலதடவை இவர் தன் காதல் கதையைப் பகிர்ந்துள்ளார். 

டேனி
 

இந்நிலையில் இன்று, டேனி  இன்ஸ்டாகிராம் பதிவில், தான் பதிவுத் திருமணம் செய்துகொண்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில், ‘உங்கள் அனைவரிடமும் இதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி. இதுதான் என் அழகு தேவதை குட்டு. என் மனைவி. நாங்கள் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். குடும்பச் சிக்கலால் இத்தனை நாள் எங்களின் காதல்குறித்து வெளியே சொல்லாமல் இருந்தேன். இன்று முதல் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக எங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரப் போகிறோம். உங்களில் அன்பும் வாழ்த்தும் எங்களுக்கு வேண்டும். இனி, நான் பேச்சிலர் கிடையாது’ என்று பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். வாழ்த்துகள் டேனி! 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!