தலைவராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக திருவாரூர் சென்ற மு.க.ஸ்டாலின்!

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முறையாக இன்று திருவாரூக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் தாயார் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினார்.

மு.க.ஸ்டாலின் 

ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி, தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி மறைந்தார். அவரின் உடல், மெரினாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதையடுத்து, தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் கடந்த 31-ம் தேதி பொறுப்பேற்றார். அதையடுத்து, முதன்முறையாக அவரது தந்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். 

உற்சாக வரவேற்பு

அதைத் தொடர்ந்து, திருவாரூர் வருகைதந்த மு.க.ஸ்டாலின், காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதைசெய்தார். மேலும், நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார். பின்னர், திருவாரூர் பகுதி தி.மு.க தொண்டர்கள், மு.க.ஸ்டாலினுக்கு பெரிய அளவிலான ரோஜாப் பூ மாலையை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!