வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (04/09/2018)

கடைசி தொடர்பு:01:00 (04/09/2018)

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து தமிழக ஆளுநரின் காரில் பதிவு எண் பொருத்தப்பட்டது!

”குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், வெளியுறவுத் துறை அமைச்சரக வாகனங்கள், மோட்டார் வாகன சட்டப்படி பதிவுசெய்யப்படுவதில்லை. அந்த வாகனங்களில் பதிவெண்கள் வெளியே தெரியும்படி நெம்பர் பிளேட்டுகளைப் பொருத்த வேண்டும்” என புது டெல்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தது.

தமிழக ஆளுநர் கார்

இந்த வழக்கில், வெளியுறவுத்துறை தாக்கல்செய்த பதில் மனுவில், ''குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், ஆளுநர் கார்களின் எண்கள் வெளியில் தெரியும்படி வாகனங்களில் வைக்க அறிவுறுத்தப்படுள்ளது” என்று தெரிவித்தார்கள். இதனால், அந்தப் பொதுநல வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசின் சார்பில் குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர், ஆளுநர் ஆகியோர் பயன்படுத்தும் கார்களின் பதிவுஎண்கள் கண்ணுக்குத் தெரியும்படி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக ஆளுநர் கார்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கறுப்பு நிற பென்ஸ் காரை தற்போது பயன்படுத்திவருகிறார். அந்த காரின் பதிவெண் தெரியும்படி வைக்காமலே பயன்படுத்தப்பட்டுவந்தது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து, TN07 RB 7777 என்ற பதிவெண் காருக்கு முன்பக்கமும் பின்பக்கமும் தெரியும்படி வைக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க