முத்ரா கடன் இலவசம் - புரளியால் ஸ்தம்பித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்! | More than a thousand women gathered in the sivagangai collector's office

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (04/09/2018)

கடைசி தொடர்பு:07:39 (04/09/2018)

முத்ரா கடன் இலவசம் - புரளியால் ஸ்தம்பித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!

முத்ரா கடன்  `மத்திய அரசு திட்டத்தில் அனைவருக்கும் இலவசமாக ரூ.50,000 கடன் வழங்குவதாக கிளம்பிய புரளியால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தைச் சமாளிக்க 'ஹோலோ போன்' மூலம் அறிவிப்பு செய்து மக்களை கலைத்தனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தை நீண்ட நேரம் அலற வைத்தது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திடீரென பெண்கள் கூட்டம் மெல்ல வர ஆரம்பித்தது. வந்த பெண்கள் எல்லாம் மனு எழுதும் இடத்திலும் ஆதார் எண்ணைப் பதிவு செய்யும் இடத்திலும் கூட்டம் அலைமோதியது. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பெண்களிடம் முத்ரா கடன் இலவசமாக கொடுக்கிறார்கள் என்கிற பொய்யான தகவல் காட்டுத் தீ போல் பரவியது. நேரம் கடந்ததும் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் ஆட்சியர் வளாகத்தில் கூடியதால் பா.ஜ.க மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம் மாவட்ட அதிகாரிகளிடம் வந்து மக்களுக்கு தவறான தகவல் பரப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த விளக்கம் அளித்து அனுப்புங்கள் என்று சொன்னார்.

அதன் பிறகு அதிகாரிகள் 'முத்ரா கடன் புதிதாக வழங்கப்படவில்லை. தகுதியானவர்கள் தொழில் தொடங்க 50,000 முதல் 10 லட்சம் வரைக்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, உங்கள் மனுக்கள் எல்லாம் பெறப்பட்டு அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம். தகுதியானவர்களை தேர்வு செய்து வங்கியில் இருந்து அழைப்பு வரும் அப்போது போய் நீங்க கடனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லி வந்திருந்த பெண்கள் கூட்டத்தை அனுப்பி வைத்தார்கள் அதிகாரிகள். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க