சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழந்த கணவர் - இரண்டு மாதமாக உடலை மீட்கப் போராடும் மனைவி!

சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை மீட்கக் கோரி இரண்டு குழந்தைகளோடு தனியாகப் போராடி வருகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பெண்.

செல்வராணி

சிவகங்கை வள்ளிசந்திர நகரைச் சேர்ந்தவர் நாகரத்தினம். இவரின் மனைவி செல்வராணி இவர்களுக்கு சுபாஷினி (15) மற்றும் கார்த்திகை செல்வி  (13) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகரத்தினம் கடந்த 2 வருடத்துக்கு முன்னர் சவுதி அரேபியாவில் உள்ள நக்மோர் என்ற இடத்தில் டிரைவர் வேலைக்குச் சென்றார்.

இந்த நிலையில், ஜூன் மாதம் 17-ம் தேதி விபத்தில் நாகரத்தினம் இறந்து விட்டார். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பப் பணம் கட்ட வேண்டும் என்ற கூறிவிட்டார்கள். வறுமையான நிலையில் வாழும் செல்வராணி, தன் கணவரின் உடலை ஊருக்குக் கொண்டுவர உதவிடும்படி ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனுக்கொடுத்தார். மேலும், சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில் நாதனிடமும் தன் கணவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர உதவிடும்படி கோரிக்கை மனு கொடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!