சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 5-ம் தேதி கடைசி நாளாகும். 

சித்த மருத்துவம்

தமிழகத்தில் சென்னை, நெல்லை ஆகிய இடங்களில் சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்கியது. ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே இந்தப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்புகளுக்கு சென்னையில் 3 அரசுக் கல்லூரிகளும், நெல்லை, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தலா ஓர் அரசுக் கல்லூரியும் உள்ளது. இதுதவிர தமிழகத்தில் 23 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும்  www.tnhealth.org என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் பெறுவதற்கு செப்டம்பர் 5-ம் தேதியே கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை மாலை 5.30 மணிக்கும் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!