வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (04/09/2018)

கடைசி தொடர்பு:17:45 (04/09/2018)

தென் மாவட்டத்தில் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி பட ஷூட்டிங்!

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

தனுஷ்- தாணு

'கபாலி' படத்துக்குப் பிறகு, 'வேலையில்லா பட்டதாரி -2' படத்தில் 'கலைப்புலி' தாணு, தனுஷ் கூட்டணி இணைந்தது. அதன்பிறகு, தாணு தயாரித்த ' 60 வயது மாநிறம்'  'துப்பாக்கி முனை'  என்று இரண்டு படங்களில் விக்ரம் பிரபுவை ஒப்பந்தம்செய்தார்.  அடுத்து,  தாணு தயாரிக்கப் போகும் மூன்று படங்களின் ஹீரோ தனுஷ். வேறு வேறு டைரக்டர்கள் இயக்குகிறார்கள்.

தனுஷ், சமுத்திரக்கனி, அமீர்,  ஐஸ்வர்யா, நடித்து வெற்றிமாறன் இயக்கியுள்ள 'வடசென்னை' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், மீண்டும் தனுஷ் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். 'கலைப்புலி' தாணு, தனுஷ், வெற்றிமாறன் இணையும் புதிய கூட்டணியின் ஷூட்டிங், அக்டோபரில் தென் மாவட்டங்களில் நடக்க இருக்கிறது. வெளிப்புறப் படப்பிடிப்புக்கான வேலைகளில் இப்போதே பரபரப்பாக இறங்கியுள்ளனர்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க