மதுரையில் செப்டம்பர் 15, 16-ல் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு!

உலகின் மூன்றாவது கோடீஸ்வரராக விளங்கும் வாரன் பஃபெட், பங்குச்சந்தை முதலீட்டின் குருவாகப் போற்றப்படுகிறார் என்ற செய்தியே பங்குச்சந்தை முதலீடு எத்தகைய லாபகரமான வருமானமீட்டும் முறை என்பதற்குச் சான்றாக இருக்கிறது. பங்குச்சந்தையில் முதலீடு என்பது வெறுமனே வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்திவிட்டு காத்திருப்பது போன்ற செயல் அல்ல. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்காணிப்பது, ஒரு நிறுவனத்தின் தினசரிச் செயல்பாடு, காலாண்டு முடிவுகள் போன்றவற்றைக் கண்காணித்து, திறம்பட செயல்படும் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு நிறைய சூட்சுமங்கள் தேவைப்படும். அதைக் கற்றுத்தேர்ந்தால் பங்குச்சந்தை என்பது அனைவருக்குமே நல்லதொரு லாபமீட்டும் முதலீடாக இருக்கும்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முறை குறித்து கற்றுக்கொள்வதற்கு நல்வாய்ப்பாக, விகடன் குழுமத்திலுள்ள நாணயம் விகடன் சார்பாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பங்குச்சந்தை குறித்த ``ஃபண்டமென்டல் அனாலிசிஸ்" இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி என ஒவ்வொரு நகரத்திலும் நடத்திய பயிற்சி வகுப்பை, மதுரை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் வரும் 2018 செப்டம்பர் 15 மற்றும் 16 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் அங்கே நடத்தவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.6,000 என நிர்ணயித்துள்ளார்கள்.

பங்குச்சந்தைபங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென ஆர்வம் உள்ளது, ஆனால் எப்படி முதலீடு செய்வது என்றுதான் தெரியவில்லையெனக் கருதுபவர்கள், இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதன்மூலம் பங்குச்சந்தை முதலீட்டுக்கான அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். மேலும், இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதன்மூலம், 'பங்கின் விலை ஏன் ஏறுகிறது அல்லது இறங்குகிறது, வலிமையான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி, ஒரு போர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்குவது' என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் விடை காணலாம்.

இப்பயிற்சி வகுப்பினை, எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையத்தின் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் நடத்துகிறார். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://bit.ly/2PsOcoS என்ற இணையதள முகவரியில் பணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பிறகு தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு : +91 9940415222

Do you like the story?

Please Appreciate the Author by clapping!