' மேடையில் நாங்களும் பேச வேண்டும்!' - மோதிக்கொண்ட திருநா, ஈ.வி.கே.எஸ் கோஷ்டிகள் | Clash between thirunavukkarasar and EKVS supporters

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (04/09/2018)

கடைசி தொடர்பு:17:48 (04/09/2018)

' மேடையில் நாங்களும் பேச வேண்டும்!' - மோதிக்கொண்ட திருநா, ஈ.வி.கே.எஸ் கோஷ்டிகள்

காங்கிரஸ் கூட்டத்தில், திருநாவுக்கரசர் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக சஞ்சை தத் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வந்த அவர், இன்று மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல், மாவட்ட வாரியாக பூத் கமிட்டிகளை அமைப்பது உள்ளிட்டவைகுறித்து விவாதிக்கப்பட்டது.  

காங்கிரஸ்

இந்நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள், மேடையில் தங்களுக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.   அதற்கு, திருநாவுக்கரசர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி, ஒருகட்டத்துக்கு மேல் கைகலப்பாக மாறியது. நிலைமையின் வீரியத்தை உணர்ந்த திருநாவுக்கரசர், மேடையிலிருந்து இறங்கிவந்து இருதரப்பினரையும் சமாதனப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அவரது சமாதானம் எடுபடவில்லை.  இறுதியாக, அவர்களே கலைந்துசென்றுவிட்டனர்.