திருமாவளவனை சந்தித்து மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு!

அப்போலோவில் சிகிச்சைபெற்றுவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

திருமாவளவன் - ஸ்டாலின்

இடைவிடாது  மேற்கொண்ட பயணங்கள் காரணமாக வயிற்றுக்கோளாறு, ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்னைகளால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவதிப்பட்டுவந்தார். இதன் காரணமாக நேற்று,  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் உள்ளார் எனவும்,  சிகிச்சைமுடிந்து நாளை வீடு திரும்புவார் எனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருவதால், இரண்டு நாள்களுக்கு கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திருமாவளவனின் உடல்நிலைகுறித்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொலைபேசிமூலம் கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திருமாவளவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரது உடல்நிலைகுறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!