`எஸ்.வி.சேகரைவிடவா கீழ்த்தரமாகப் பேசிவிட்டார்?' - ஷோபியாவுக்குக் குவியும் ஆதரவு | Reactions of social media people for sophia arrest

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (04/09/2018)

கடைசி தொடர்பு:21:15 (04/09/2018)

`எஸ்.வி.சேகரைவிடவா கீழ்த்தரமாகப் பேசிவிட்டார்?' - ஷோபியாவுக்குக் குவியும் ஆதரவு

`எஸ்.வி.சேகரைவிடவா கீழ்த்தரமாகப் பேசிவிட்டார்?' - ஷோபியாவுக்குக் குவியும் ஆதரவு

தூத்துக்குடி விமான நிலையத்தில் பி.ஜே.பி-யின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜனைப் பார்த்து ''பாசிச பா.ஜ.க ஒழிக'' என்று கோஷம் எழுப்பிய ஷோபியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழிசைக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழிசை

சென்னையிலிருந்து நேற்று (3.9.2018) விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் பிஹெச்.டி படிக்கும் ஆராய்ச்சி மாணவி சோபியாவும் அதே விமானத்தில் பயணம் செய்தார். `விமானத்தில் வைத்தே `பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக' என்று கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினார். தூத்துக்குடி விமான நிலையத்திலும் இதுபோன்று ஷோபியா கோஷமிட்டிருக்கிறார்'' என்று தமிழிசை, ஷோபியா மீது புகார் கொடுத்தார். இதே போல, ஷோபியாவின் தந்தை சாமியும் தமிழிசையுடன் வந்தவர்கள், தன் பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பினார். ஆனால், அந்தப் புகார் மனு மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில், ஷோபியா கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஷோபியாவுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம்.

சோபியா

நெட்டிசன் ரியாக்‌ஷன்ஸ்..

திலகவதி குமார் -  'பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக'ன்னு சொல்லக்கூட உரிமை இல்லைன்னா, இது பாசிச ஆட்சி இல்லாம டெமாக்ரசி அரசா..!

இளமதி சாய்ராம் - டியர் தமிழிசை மேடம்... பா.ஜ.க பாசிசக் கட்சி இல்லன்னா கோஷம் போட்ட ஷோபியாவை ஏன் கைது செய்யணும்? 

நெல்சன் சேவியர் - “வாருங்கள் ஷோபியா” எனத் தோள் மேல் கை அணைத்து அழைத்து வந்து, “ஏன் கோஷமிட்டாய்? ஏன் எங்களை எதிர்க்கிறாய்” என 10 நிமிடங்கள் அங்கேயே நின்று பேசியிருந்தால், 'ஒருநாள் அலுவலகம் வா நிதானமாகப் பேசலாம்' எனச் சொல்லியிருந்தால் புதிய தமிழிசை பிறந்திருக்கலாம். புதிய அரசியல் படைத்திருக்கலாம்.

நாஞ்சில் அரவிந்தா - பாசிசம் பாயாசம்னு போஸ்ட் போடறவங்களுக்கு எல்லாம் ஒண்ணே; இல்ல ரெண்டே ரெண்டு சொல்லிக்கிறேன்....
கதறுங்க... கதறுங்க...

கிருஷ்ணகுமார் - ஷோபியா முழக்கம் மட்டுமே இட்டார். "ஆம் நாங்கள் பாசிஸ்ட்டுகள்தான்" என்று இந்த அரசு செய்து காட்டிவிட்டது.

அராத்து ஆர் - பா.ஜ.க-வை விமர்சிக்கலாம் திட்டலாம். மோடியை விமர்சிக்கலாம் தப்பே இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெள்ளந்தியான எளிமையான தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அவரை ஏளனம் செய்வது கேலி செய்வது டர்ட்டி பாலிடிக்ஸ்.

நாராயணன் திருப்பதி - தமிழக அரசியல்வாதிகளே! விமான பயணத்தின்போது, ஒரு கட்சித் தலைவரை அதுவும் மரியாதைக்குரிய ஒரு பெண்மணியை முற்றுகையிட்டு, அவரை தகாத வார்த்தைகளால் பேசுவதை பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்ற காரணத்தால் கண்டிக்காமல், குற்றம் புரிந்தவரை ஆதரிக்கும் நிலையை எடுப்பது உங்களின் தலையில் நீங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் முயற்சி. நாளை விமான பயணத்தில் உங்களையும் சிலர் அவமதிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊடகவியலாளர்கள் இதுநாள் வரை விமான பயணங்களில் ஏற்பட்ட பிரச்னைகளை எப்படி கையாண்டீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கவும்.

ராஜன் - எஸ்.வி.சேகரைவிடவா இந்தப்பெண் கீழ்த்தரமாகப் பேசிவிட்டார்?

அருணா ராமச்சந்திரன் - தமிழிசை கூறியுள்ள அனைத்து உரிமைகளும் சட்டங்களும், சுயமரியாதையும் சகோதரி ஷோபியாவுக்கும் உண்டு. ஷோபியா கொடுத்துள்ள வழக்கில் தமிழிசையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்