வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (04/09/2018)

கடைசி தொடர்பு:21:50 (04/09/2018)

சென்னையில், 'நாணயம் விகடன்' சார்பில் டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு!

பங்குச் சந்தையின் போக்கு எவ்வாறு உள்ளது, எதனால் சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது, ஏன் இறக்கம் காண்கிறது, அடுத்தடுத்த வாரங்களில் பங்குச் சந்தையின் போக்கு எவ்வாறு இருக்கும், உலகப் பொருளாதாரச்சூழல் எப்படி உள்ளது என்பவற்றையெல்லாம் டெக்னிக்கல் அனாலிசிஸ் செய்துபார்க்கும் திறமை டிரேடிங்கில் ஈடுபடுபவர்களுக்கு இருக்க வேண்டும்.

இந்தியாவில், பங்குச் சந்தை வர்த்தகம் என்பது தற்போது வெற்றிகரமான தொழில்முறையாக வளர்ந்துவருகிறது. பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களாக நுழைந்த பலரும், அடுத்தகட்டமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிக அளவில் லாபமீட்டிவருகிறார்கள்.

பங்குச்சந்தை

பங்கு வர்த்தகத்தில் எந்த நேரத்தில் டிரேட் செய்ய வேண்டும் என்ற டெக்னிக்கலைத் தெரிந்துகொண்டால் மட்டுமே டிரேடிங்கை பெருமளவில் லாபகரமானதாக நடத்த முடியும். பங்குச் சந்தையின் போக்கு எவ்வாறு உள்ளது, எதனால் சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது, ஏன் இறக்கம் காண்கிறது, அடுத்தடுத்த வாரங்களில் பங்குச் சந்தையின் போக்கு எவ்வாறு இருக்கும், உலகப் பொருளாதாரச்சூழல் எப்படி உள்ளது என்பவற்றையெல்லாம் டெக்னிக்கல் அனாலிசிஸ் செய்துபார்க்கும் திறமை, டிரேடிங்கில் ஈடுபடுபவர்களுக்கு இருக்க வேண்டும். மேலும், ஒரு நிறுவனத்தின் பங்கை எந்த விலைக்கு வாங்கலாம், எந்த விலையை இலக்காகக் கொள்ளலாம், எந்த விலையில் ஸ்டாப்லாஸ் வைத்து விற்கலாம் போன்றவற்றைக் கணிக்கும் திறமையும் டிரேடர்களுக்குக் கண்டிப்பாகத் பங்குச்சந்தைதேவைப்படும்.

இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக, விகடன் குழுமத்திலுள்ள நாணயம் விகடன் சார்பாக நடத்தப்படும் டெக்னிக்கல் அனாலிசிஸ் இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு அமைந்துள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதன்மூலம் முறையாகப் பயிற்சிபெற்று பங்குச் சந்தை வர்த்தகத்தை முறையாகச் செய்து அதிக லாபத்தைச் சம்பாதிப்பதுடன், நஷ்டத்தைத் தவிர்க்கவும் முடியும். வரும் செப்டம்பர் 29 & 30 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த வகுப்புக்கான கட்டணம் ரூ.8,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை வர்த்தகம்குறித்து பல்லாண்டுகளாகப் பயிற்சியளித்துவரும், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மைய இயக்குநர் தி.ரா.அருள்ராஜன் இப்பயிற்சியை வழங்குகிறார். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு பதிவுசெய்துகொள்ளலாம். பணம் செலுத்தி பதிவுசெய்துகொள்ள கடைசி நாள் 25.9.2018. பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு : +91 9940415222 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.