`அரசியல்வாதிகள் மட்டும் இதைச் செய்யலாமா?' - தமிழிசைக்குக் கேள்வி எழுப்பும் நடிகர் சித்தார்த் | actor siddharth condemned sophia arrest

வெளியிடப்பட்ட நேரம்: 05:32 (05/09/2018)

கடைசி தொடர்பு:07:18 (05/09/2018)

`அரசியல்வாதிகள் மட்டும் இதைச் செய்யலாமா?' - தமிழிசைக்குக் கேள்வி எழுப்பும் நடிகர் சித்தார்த்

`அரசியல்வாதிகள் மட்டும் மேடைகள் போட்டு அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பக்கூடாதா' என தமிழிசைக்கு நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழிசை - சித்தார்த்

பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசைக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா, "பாசிச பா.ஜ.க ஒழிக; மோடி ஒழிக" எனக் கோஷம் எழுப்பியதுதான் தமிழகத்தின் தற்போதைய 'ஹாட் டாப்பிக்'. ஷோபியாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகவே மாறிவருகிறது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தமிழிசையின் செயலையும், தமிழக காவல்துறையின் செயலையும் கண்டித்து கருத்து பதிவிட்டுவருகின்றனர்

இந்த நிலையில், நடிகர் சித்தார்த் தமிழிசைக்கு எதிராக ட்விட்டரில் காட்டமாகக் கருத்து பதிவிட்டுள்ளார். தமிழிசையின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, ``இந்தியாவில் அரசியல்வாதிகள் தங்களின் முகஸ்துதிக்காக எப்போது வேண்டுமானாலும், கோஷங்களை எழுப்பி அமைதியைக் கெடுக்கலாம். அதேபோல் சட்டத்துக்கு புறம்பாக போஸ்டர்கள், பதாகைகள், ஏன் மேள தாளங்கள் கூட அடித்து அரசியல்வாதிகள் கொண்டாடலாம். ஆனால், உங்களுக்கு எதிராக ஒருவர் விமான நிலையத்தில் கத்தக்கூடாது. அப்படித்தானே" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க