வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (05/09/2018)

கடைசி தொடர்பு:14:29 (05/09/2018)

கடலூரில் `மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு மந்திரங்கள்' முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யத் தயங்குபவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்கவேண்டியவை எவையெவை, மியூச்சுவல் ஃபண்டில் எத்தனை வகை இருக்கிறது, ஒவ்வொரு வகை முதலீடும் யாருக்கு பொருத்தமாக இருக்கும், முதலீட்டுக்கான காலங்களை எப்படித் தேர்வுசெய்வது போன்ற சூட்சுமங்களைக் கற்றுத் தெளிவுபெற இந்த விழிப்பு உணர்வுக் கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதைய காலகட்டத்தில் அதிக வருமானமீட்டும் வேலைவாய்ப்புகள், தொழில்கள் பெருகியுள்ளன. வருமானத்தை திறம்பட முதலீடு செய்வதில்தான் முழுவெற்றியே இருக்கிறது. அப்படி முதலீடு செய்து வருமானத்தை இன்னும் பன்மடங்கு பெருக்குவதற்கு முதலீடு செய்வது குறித்த விழிப்பு உணர்வு அதிகரிக்க வேண்டும். அதற்காக, நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, 'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை தமிழகமெங்கும் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்

வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் எனக் குறிப்பிட்ட சிலவற்றில் மட்டுமே காலங்காலமாக முதலீடு செய்துவருபவர்கள், தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யத் தயங்குபவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்கவேண்டியவை எவையெவை, மியூச்சுவல் ஃபண்டில் எத்தனை வகை இருக்கிறது, ஒவ்வொரு வகை முதலீடும் யாருக்கு பொருத்தமாக இருக்கும், முதலீட்டுக்கான காலங்களை எப்படித் தேர்வுசெய்வது போன்ற சூட்சுமங்களைக் கற்றுத் தெளிவுபெற இந்த விழிப்பு உணர்வுக் கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

வரும் செப்டம்பர் 9, 2018, ஞாயிற்றுக்கிழமையன்று, கடலூரில், 'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்!' முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் VIKATAN<space>பெயர்<space>ஊர்<space>NVMFCL என டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பவும். அனுப்ப வேண்டிய எண்: 56161 அல்லது 9790990404. அனுமதி இலவசம். முந்துபவர்களுக்கே முன்னுரிமை.