வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (06/09/2018)

கடைசி தொடர்பு:07:18 (06/09/2018)

நெதர்லாந்து விரைந்த வழக்கறிஞர் - சர்வதேச நீதிமன்றத்தை நாடும் நளினி!

ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 1991-ம் ஆண்டு மே - ஜூன் மாதங்களில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைகளில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன.

நளினி

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, 2014-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் தீர்ப்பு கடந்த ஏப்ரல் 27-ம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நளினியை விடுவிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில், நளினியின் விடுதலைக்காக - சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கை எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக  வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் என்பவர் நெதர்லாந்து நாட்டுக்கு தற்போது சென்றிருக்கிறார். இந்தத் தகவலை நளினியின்  வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க