`கருணாநிதி கட்டிக்காத்ததை நிறைவேற்றுவேன்' - அண்ணா இல்லத்தில் உறுதிமொழி எடுத்த மு.க.ஸ்டாலின் | M.K stalin came to anna memorial house

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (06/09/2018)

கடைசி தொடர்பு:11:25 (06/09/2018)

`கருணாநிதி கட்டிக்காத்ததை நிறைவேற்றுவேன்' - அண்ணா இல்லத்தில் உறுதிமொழி எடுத்த மு.க.ஸ்டாலின்

``கருணாநிதி கட்டிக் காத்துவந்த சமூகநீதி - சமத்துவம்-சமதர்மம் ஆகியவற்றை நிறைவேற்றப் பாடுபடுவேன்" என அண்ணா இல்லத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின், காஞ்சிபுரம்

தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன் முதலாக நேற்று இரவு காஞ்சிபுரம் வந்தார். அவரை வரவேற்க தி.மு.க தொண்டர்கள் காலையிலிருந்தே ஏற்பாடுகளைக் கவனித்து வந்தனர். அவர் வருவதற்கு முந்தையநாள் விழா ஒன்றுக்காக காஞ்சிபுரம் வழியாகச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காஞ்சிபுரம் முழுக்க பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதுபோல் இன்று காலை தினகரனும் காஞ்சிபுரம் வருகிறார் என்பதால் அவருக்கும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏ.கே.மூர்த்தி தலைமையில் பா.ம.க மாவட்ட பொதுக்குழு கூட்டத்துக்கும் அதிக அளவில் பேனர்கள் வைக்பப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஸ்டாலின் வருகையையொட்டி 4 பேனர்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. காஞ்சிபுரம் வந்த ஸ்டாலினுக்கு அண்ணா நூற்றாண்டு நினைவுத் தூண் அருகே வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்பு அண்ணா நினைவு இல்லத்துக்கு வந்த ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்த வி.ஐ.பி. வருகைப் பதிவேட்டில், ``தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அறிஞர் அண்ணாவின் இல்லத்துக்கு தி.மு.க தலைவராக வந்துள்ளேன். புத்துணர்வைப் பெற்றுள்ளேன். அண்ணா வழியில் கருணாநிதி கட்டிக்காத்து வந்த சமூகநீதி - சமத்துவம் - சமதர்மம் ஆகியவற்றைக் கழக உடன் பிறப்புகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப் பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன்” எனத் தனது கைப்பட எழுதிக் கையெழுத்திட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க