”விடுதலையாகி, என் மகனை நேரில் பார்த்தால்தான் நம்ப இயலும்!” - பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்

பேரறிவாளன்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைகுறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலைக்குற்ற விவகாரத்தில் ஏழு பேரை விடுதலைசெய்வது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை மனுவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மனுவை இன்று விசாரித்தது. விசாரணையின் இறுதியில், பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுவிப்பதில் தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், அதற்கு தமிழக அரசு பரிந்துரைசெய்யலாம் என்றும் அந்த  அமர்வு கூறியிருக்கிறது. 'பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க அரசு தரப்பு தயாராக இருக்கிறது' என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், தமிழக அரசு இதுகுறித்து விவாதிக்க அதிவிரைவாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அற்புதம்மாள் குயில்தாசன்

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புபற்றி கருத்து கூறியுள்ள பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், ’விடுதலையாகி, என் மகனை நேரில் பார்த்தால்தான் நம்ப இயலும்!’ என்று கூறியிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!