`நமது கலாசாரத்தை மாணவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்' -  பிரணாப் முகர்ஜி அறிவுரை

சங்கர மடம் சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று கலந்துகொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், சங்கர மடத்துக்கு வந்தவர், அங்கு நடைபெற்ற பூஜைகளில் கலந்துகொண்டு விஜயேந்தரரிடம் ஆசி பெற்றார். 

பிரணாப் முகர்ஜி, காஞ்சிபுரம் சங்கர மடம்

சங்கர மடத்தின் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ மடத்தின் மூலமாக ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயாவில் புதிதாகக் கட்டப்பட்ட நான்கு மாடிக் கட்டடத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து சங்கரா யுனிவர்சிட்டி வளாகத்தில் அமைந்துள்ள 60 அடி உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆதிசங்கரர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு மாணவர்களிடையே உரையாற்றியவர், “நமது கலாசாரத்தை நமது முன்னோர்கள் காப்பாற்றி வந்தனர். அதை நாம் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சங்கரா பல்கலைக்கழகத்தில் பாரம்பர்ய கல்வியுடன், தற்கால கல்வியும் கிடைக்கிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். 

பிரணாப் முகர்ஜி, காஞ்சிபுரம், சங்கர மடம்

அதைத் தொடர்ந்து சங்கர மடத்துக்கு வந்த பிரணாப் முகர்ஜி, அங்குள்ள பிருந்தாவனத்தில் உள்ள ஜெயேந்திரர் சரஸ்வதி அபிஷ்டானத்தை தரிசனம் செய்தார். மேலும், அங்கு பூஜைகளில் கலந்துகொண்டார். பூஜைகளை முடித்துக்கொண்டு விஜயேந்திரருடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக்கொண்டிருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!