வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (06/09/2018)

கடைசி தொடர்பு:20:54 (06/09/2018)

குழந்தைகளை இழந்த குன்றத்தூர் ரசிகருக்கு மக்கள் மன்றத்தில் பொறுப்பு வழங்கிய ரஜினி!

சென்னையில், இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவர் விஜய்க்கு, ரஜினி மக்கள் மன்றத்தில்  பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ரஜினி மக்கள் மன்றம்

சென்னை குன்றத்தூர் அருகே, பிரியாணிக் கடை நடத்திவரும் சுந்தரம் என்பவரின்மீது கொண்ட காதலால், தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தப்பியோட முயன்ற அபிராமியைக் காவல்துறையினர் கைதுசெய்து, புழல் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து ஆறுதல் கூறினார்.

நியமனம்

 

கண்கலங்கியபடி நடிகர் ரஜினிகாந்த்,  ``ஆண்டவன் துணை இருப்பான்; நாங்கள் இருக்கோம் மீண்டு வாருங்கள்’ என்று அவரைத் தேற்றினார். இந்நிலையில், நேற்றைய சந்திப்பின் எதிரொலியாக, இன்று குழந்தைகளை இழந்து தவிக்கும் விஜய்க்கு, ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளையஞரணி இணைச் செயலாளராக விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சுதாகர் வெளியிட்டுள்ளார்.