சென்னை பா.ஜ.க அலுவலகம் முன்பு போராடச்சென்ற மதுரை நந்தினி, தந்தை, சகோதரி கைது! | Madurai Nanthini arrested at chennai

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (07/09/2018)

கடைசி தொடர்பு:11:37 (07/09/2018)

சென்னை பா.ஜ.க அலுவலகம் முன்பு போராடச்சென்ற மதுரை நந்தினி, தந்தை, சகோதரி கைது!

சென்னையிலுள்ள பி.ஜே.பி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தச் சென்ற மதுரையைச் சேர்ந்த சமூகப் போராளி நந்தினியும் அவர் சகோதரி மற்றும் தந்தை ஆனந்தன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை நந்தினி​​​​

பிஜேபியின் ஆட்சியை எதிர்த்து கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடி வீட்டு முன் போராட்டம் நடத்தச் சென்றபோது அம்மாநில போலீஸாரால் நந்தினி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இதற்காக பி.ஜே.பி- யினர் நந்தினியை செல்போன் மூலம் ஆபாசமாகப் பேசியும் மிரட்டல் விடுத்து வருவதாகவும் அதைக் கண்டித்து சென்னையிலுள்ள பி.ஜே.பி-யின் மாநிலத் தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்போவதாகவும் நந்தினி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை தி.நகர் பிஜேபி அலுவலகத்துக்குப் போராட்டம் நடத்தச் சென்றபோது, தகவல் அறிந்த காவல்துறையினர் ரங்கநாதன் தெருவிலேயே மறித்து, நந்தினி, அவரது தந்தை ஆனந்தன், மதுரை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வரும் தங்கை நிரஞ்சனா ஆகியோரை கைது செய்தனர். தற்போது இவர்களை தி.நகர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார்கள் என்பதை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க