`தவறுதான்; மீண்டும் நடக்காது' - விமர்சித்த தொண்டருக்கு உதயநிதி அளித்த பதில்

ட்விட்டரில் தி.மு.க தொண்டர் ஒருவர், கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் உதயநிதி படம் இருப்பது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

 
உதயநிதி

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் கடந்த 4-ம் தேதி மாலை பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ-க்கள் துரை, சந்திரசேகர், ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றது குறித்தும் கட்சியில் அவர் எப்படி வளர்ந்தார் என்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை எம்.எல்.ஏ-க்கள் பயன்படுத்துவதற்காக கொடுக்கப்படும் தமிழக அரசின் முத்திரையிட்ட லெட்டர் பேடில் எழுதியுள்ளார்கள். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

ட்வீட்

இந்த நிலையில், இந்தக் கூட்டத்தின் மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் கருணாநிதி, ஸ்டாலின் படங்களைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் படமும் இருந்தது. ட்விட்டரில் இந்தப் படத்தை ஷேர் செய்த தி.மு.க தொண்டர் ஒருவர், ``முன்னணித் தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?” மேலும், ஒரு தி.மு.க தொண்டனாக இதைப் பார்க்க கஷ்டமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு உதயநிதி ஸ்டாலின், ``தவறு! மீண்டும் நடக்காது!” என்று தெரிவித்துள்ளார். 

தற்போது தி.மு.க-வின் பொதுக்கூட்டங்கள் மற்றும் போராட்டங்களில் உதயநிதி கலந்துகொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!