நிலத்தை அபகரித்த தி.மு.க பிரமுகருக்கு ஓராண்டு சிறை! - ஓசூர் நீதிமன்றம் அதிரடி | Hosur court ordered one year imprisonment to dmk cadre

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (07/09/2018)

கடைசி தொடர்பு:16:50 (07/09/2018)

நிலத்தை அபகரித்த தி.மு.க பிரமுகருக்கு ஓராண்டு சிறை! - ஓசூர் நீதிமன்றம் அதிரடி

வுடிகளை ஏவி இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ஓசூர் தி.மு.க முன்னாள் நகரச் செயலாளருக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேர்பேட்டையைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் ஓசூர் பி.டி.ஓ அலுவலகம் முன்பாக கடந்த 29.9.2011 அன்று மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை எதிர்பார்க்காத அக்கம் பக்கம் இருந்தவர்கள், அவரைக் காப்பாற்றி மாதேஸ்வரன்காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஓசூர் நகரக் காவல் நிலையத்தில் குற்ற எண் 1023/2011-ன்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

காவல்துறை விசாரணையில், ஈஸ்வரிக்குச் சொந்தமான நிலத்தை என்.எஸ்.மாதேஸ்வரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி, மாதேஸ்வரனிடம் கேட்டபோது ரவுடிகளை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அதன் காரணமாகத் தற்கொலை முடிவை நாடியிருக்கிறார் ஈஸ்வரி என்பது தெரியவந்தது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதே மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகாரும் செய்திருக்கிறார். அதன் பிறகும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. எனவே, வேறு வழி தெரியாததால், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் ஈஸ்வரி. 

இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார் மாதேஸ்வரன். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஓசூர் ஜெ.எம் 2 நீதிமன்ற நீதிபதி சாந்தி, குடும்ப சூழல் மற்றும் அவரின் நன்னடத்தை காரணமாக ஈஸ்வரியை விடுதலை செய்வதாகவும், தற்கொலை முயற்சி செய்யக் காரணமாக இருந்த என்.எஸ்.மாதேஸ்வரனுக்கு சட்டப் பிரிவு 235(2)படி ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிப்பதாக உத்தரவிட்டார்.