`பாரத் பந்த்’தை வெற்றிபெறச் செய்யுங்கள் - காங்கிரஸுடன் கரம்கோத்த மு.க.ஸ்டாலின்!

'பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பாரத் பந்த்-துக்கு தி.மு.க ஆதரவு அளிக்கிறது' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை, கடந்த சில மாதங்களாகக் கடுமையாக அதிகரித்துவருகின்றன. தற்போது, பெட்ரோல் 83 ரூபாய்க்கும், டீசல் 72 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றன. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றன.

இந்த நிலையில், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 10-ம் தேதி,  நாடு தழுவிய பந்த் நடத்தப்படும்' என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் அறிவித்துள்ள பந்த்-துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், 'பா.ஜ.க அரசின் பெட்ரோல், டீசல் உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் அறிவித்துள்ள நாடு தழுவிய கடையடைப்புக்கு தி.மு.க முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. 10-ம் தேதி நடைபெறவுள்ள பந்த்-துக்கு பொதுமக்களும் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்து போராட்டத்தைப் பெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!