14 மாநிலங்கள் ஒன்றுகூடிய இயற்கை வேளாண் கண்காட்சி.. என்ன ஸ்பெஷல்? | What is special in the 5-day long organic fair

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (08/09/2018)

கடைசி தொடர்பு:11:46 (08/09/2018)

14 மாநிலங்கள் ஒன்றுகூடிய இயற்கை வேளாண் கண்காட்சி.. என்ன ஸ்பெஷல்?

"எல்லா சூழ்நிலைகளுக்கும் பாரம்பர்ய ரக நெல்தான் ஏற்றது" - இயற்கை விவசாய நிபுணர் விஜயலட்சுமி!

14 மாநிலங்கள் ஒன்றுகூடிய இயற்கை வேளாண் கண்காட்சி.. என்ன ஸ்பெஷல்?

மிழகம் முழுவதும் இயற்கைச் சார்ந்த பொருட்களுக்கும், இயற்கைச் சார்ந்த நிகழ்வுகளுக்கும் வரவேற்பு பெருகி உள்ளன. அதனால் தமிழகத்தில் அதிகமான இயற்கை விவசாய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் எய்ம் ஃபார் சேவா என்ற அமைப்பைச் சேர்ந்த ஸ்பிரிட் ஆப் தி எர்த் குழு இந்திய இயற்கை வேளாண்மைக் கண்காட்சியை நடத்துகிறது. சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னைதெரசா மகளிர் வளாகத்தில் நேற்று 7-ம் தேதி தொடங்கி வரும் 11-ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து 14 மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய விதைகள், கலைப்பொருட்கள் விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர். 

கடந்த 7- ம் தேதி தொடங்கிய கண்காட்சியில் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகள், தொழில்முனைவோர் எனப் பல தரப்பினர் பங்கேற்கின்றனர். கல்வி மற்றும் விழிப்புஉணர்வு மூலம் இயற்கை வேளாண்மையை முன்னிலைப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இக்கண்காட்சி சில்லறை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஆலோசகர்கள் எனப் பல துறைகளைச் சேர்ந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 14 மாநிலங்களைச் சேர்ந்த அரிசி, தேன், சர்க்கரை, மசாலா மற்றும் நறுமணப் பொருட்கள், இனிப்பு பொருட்கள், எண்ணெய்கள், காபி, தேயிலை பானங்கள், அழகுப்பொருட்கள், ஆர்கானிக் துணிகள் ஆகியவை கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகின்றன.

இயற்கை

இந்நிகழ்வின் தொடக்க விழாவில் பேசிய இயற்கை விவசாய நிபுணர் டெபால் டெப் இந்திய அறிவுசார் அமைப்பின் T நிறுவனர் டாக்டர் கே.விஜயலட்சுமி, "பாரம்பர்ய ரக அரிசி வகைகளை இன்று முற்றிலுமாக மறந்துவிட்டோம். புதிய வீரிய ரக நெல் எல்லா இடங்களுக்கும், எல்லா சூழலுக்கும் ஒத்து வராது. நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பர்ய ரக விதைப்பே என்றும் நிலையான பயனைத் தரும். ஒரு விவசாயம் இயற்கைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். கருங்குறுவை, மாப்பிள்ளைச் சம்பா, வாடன் சம்பா, சிவப்பு அரிசி எனப் பல இயற்கை அரிசி வகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடியவை. இன்றைக்கு உண்ணும் உணவில் சத்துகள் இல்லாத அரிசிதான் இருக்கிறது. மேலும், பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு மேலும் கோடுகளைத்தான் கொடுக்கிறது. விவசாயிகளுக்கும் நஷ்டத்தைத் தவிர்க்க பாரம்பர்ய ரக நெல்லைத்தான் விதைக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதிலும் விதைகளைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். பாரம்பர்ய நெல் வகைகள் ஒவ்வொன்றும் நம் உடலுக்கு நன்மை கொடுத்ததால் மட்டுமே நமது முன்னோர்கள் அவற்றை விதைத்து வந்தனர்" என்றார்.

இதுதவிர, சாம்பவ் அமைப்பின் நிறுவனர் மற்றும் நாரிசக்தி விருதுபெற்றவருமான சபர்மதி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி மகாதேவன் ஆகியோர் இயற்கை விவசாயம் பற்றிய தங்களது கருத்துகளை பேசினர். விழாவில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அழகுப் பொருட்கள், ஆர்கானிக் ஆடைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், கைத்தறி ஆடைகள், பாரம்பர்ய விதைகள், நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கலைப் பொருட்கள் என மொத்தம் 50 ஸ்டால்களுக்கு மேல் அமைந்துள்ளன. பாரம்பர்ய ரக பொருட்களை விற்பனை செய்யும் ஸ்டால்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இவ்விழா 11-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close