‘எனது கடைசி காலத்தில் மகனுடன் இருக்க விடுங்கள்’- ரவிச்சந்திரனின் தாயார் முதல்வருக்கு கடிதம் | Rajiv gandhi Assassination case - Ravi chandran Mother Letter to CM

வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (09/09/2018)

கடைசி தொடர்பு:12:07 (09/09/2018)

‘எனது கடைசி காலத்தில் மகனுடன் இருக்க விடுங்கள்’- ரவிச்சந்திரனின் தாயார் முதல்வருக்கு கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனை விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், எனது மகன் ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகிறார். இந்த 27 ஆண்டு சிறையில் 4 முறை அவருக்கு பரோல் விடுமுறை வழங்கப்பட்டது.  என் மகன் உள்ளிட்ட 7 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகின்றேன். எனக்கு தற்போது 63 வயதாகிவிட்டது. எனது கணவரும் 15 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். எனது கடைசி காலத்தைக் மகனுடன் கழிக்க விரும்புகிறேன். அதனை தங்கள் தலைமையிலான அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். எனவே எனது மனுவைக் கனிவுடன் பரிசீலனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசியலமைப்புச்சட்டம் ஷரத்து 161-ன் படி உடனடியாக எனது மகனை விடுதலை செய்ய ஆணைப் பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்  7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி .பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.