ஏழு பேரின் விடுதலை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு! - அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக் குறித்த முடிவு இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தெரியவரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ

நாகர்கோவிலில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நடும் விழா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடந்தது. இதில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், வடசேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், "பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்த முடிவு, இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தெரியவரும்.

கால்கோள் விழாவில் அமைச்சர்கள்

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு முதலமைச்சர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்து. தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி அனைவரும் கருத்துச் சொல்லும் உரிமை உள்ளது. சட்டரீதியாக பாதுகாப்பு தமிழகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக யாரும் எதையும் சொல்லலாம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!