`அரசுப் பள்ளிகளின் நிலையை நம்மால் மாற்ற முடியும்!’ - ஜி.வி.பிரகாஷ் முன்னெடுத்த முயற்சி | G.v.Prakash kumar adopted govt school

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/09/2018)

கடைசி தொடர்பு:16:00 (09/09/2018)

`அரசுப் பள்ளிகளின் நிலையை நம்மால் மாற்ற முடியும்!’ - ஜி.வி.பிரகாஷ் முன்னெடுத்த முயற்சி

`ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். என்னால் முடிந்த உதவியை நான் செய்துள்ளேன். அதேபோல தங்களால் இயன்ற உதவியை செய்ய மற்றவர்களும் முன்வர வேண்டும்” என்று நடிகர் ஜி.வி.பிரகாஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார்


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் குறித்து, நடிகரும், இசையமைப்பாளருமான, ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "கல்வி என்பது எல்லோருக்குமான அடிப்படை தேவை. அது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் நிறைய அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே கல்வி வியாபாரமாக மாறி இருக்கிறது.இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக அளவில் சாதித்த பல தமிழர்கள், அரசுப் பள்ளி மாணவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி, யு.கே.ஜி சொல்லித் தரும் ஆசிரியர்களின் சம்பளத்தை நான் ஏற்றுள்ளேன். எனது ரசிகர்கள் மற்றும் அயல்நாட்டில் இருக்கும் தமிழர்கள், இதேபோல் கிராமத்தில் இருக்கும் பள்ளியைத் தத்தெடுத்து உதவ வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.