வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (10/09/2018)

கடைசி தொடர்பு:14:01 (10/09/2018)

ராகவா லாரன்ஸுடன் நடிக்கத் தயாராகும் வில்வித்தை சுட்டி சஞ்சனா!

வில்வித்தை மூலம் சாதனை படைத்தவர், 3 வயது துறுதுறு சுட்டி, சஞ்சனா. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், மூன்றரை மணி நேரத்தில் 1,111 அம்புகள் எய்து சாதனை படைத்தவர். கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்திருக்கும் இந்தக் குட்டி சஞ்சனாவுக்கு, பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், சஞ்சனாவை தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கிறார்.

வில் வித்தை சுட்டி சஞ்சனா

சஞ்சனாவும் அவர் பெற்றோரும் ராகவா லாரன்ஸை சந்தித்துள்ளனர். அங்கே, அவர்களுக்கு விருந்தளித்து தன்னுடைய பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமா? 'நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறதா...' என சஞ்சனாவிடம் கேட்டிருக்கிறார். சஞ்சனா சம்மதம் தெரிவிக்கவே, 'சீக்கிரம் என் படத்தில் உன்னை நடிக்கவைக்கிறேன்' எனச் சொல்லியிருக்கிறார். மேலும், எந்த உதவியாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள்' எனவும் சொன்னதாக உற்சாகமாகச் சிரிக்கிறார் சஞ்சனா. ஸ்டாலின் உட்பட, பல அரசியல் தலைவர்களும் சஞ்சனாவை அழைத்துப் பாராட்டிவருகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க