குட்கா ஆலை அதிபர் அமீத் ஜெயின் எங்கே? - கோவைக்கு விரையும் சி.பி.ஐ

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்த அத்தியாயத்தைக் கிளற ஆரம்பித்துள்ளனர். 

சிபிஐ

கோவை புறநகரில் உள்ள சூளுர் ஏரியாவில் ரகசியமாக 8 வருடங்களாகக் குட்கா குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. மத்திய உளவுப் பிரிவினர் கொடுத்த தகவலையடுத்து, லோக்கல் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது குட்கா பொருள்கள், இயந்திரங்களைக் கைப்பற்றினர். அத்தோடு, மிக முக்கியமான சின்ன டைரியும் சிக்கியது. அந்தக் குடோனை நடத்தி வந்த பிரமுகர் அமீத் ஜெயின். டெல்லிக்காரர். குடோன் தொடர்பில் உள்ளவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த உள்ளூர் அரசியல் தலைவர்கள் குறித்து சில தகவல்கள் சிக்கின. 

குடோன் நடப்பது அந்த ஏரியா போலீஸ் அதிகாரிகள், முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், மாவட்ட அளவில் இன்னொரு அதிகாரி, லைசென்ஸ் கொடுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று சிலருக்கு மட்டும் தெரியுமாம். குடோன் உரிமையாளர் அமீத் ஜெயின், தற்போது முன்ஜாமீன் வாங்கி வெளியில் இருக்கிறாராம். இந்திய அளவில் குட்கா நெட்வொர்க்கில் அமீத் ஜெயின் பெயரும் இருக்கிறதாம். எனவே, குட்கா நெட்வொர்க்கை முழுதுமாகக் கண்டுபிடிக்க அமீத் ஜெயினைத் தேடி கோவைக்கு விரைந்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!