கடலூரில் உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலை! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | Petrol Price touched record high of rs.85.91 in Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (10/09/2018)

கடைசி தொடர்பு:19:20 (10/09/2018)

கடலூரில் உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலை! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்த நிலையில் தமிழகத்திலேயே கடலூரில்தான் அதிகபட்சமாக ஒரு லிட்டர் ரூ 85.91-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 85.91-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.78.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.91-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.76.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே கடலூரில்தான் பெட்ரோலின் விலை அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பெட்ரோல் விற்பனையாளர்களிடம் கேட்டதற்கு, சென்னையிலிருந்து எடுத்து வரப்படும்  டிரான்ஸ்போர்ட் செலவை வைத்துதான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது' என்கின்றனர்.

 புதுச்சேரி

கடலூருக்கு அருகில் உள்ள  புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.59-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.36-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடலூரைவிட புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.6.32 காசுகள் குறைவு. இதனால் கடலூரில் உள்ள வாகன ஓட்டிகள் கடலூருக்கு அருகில் 5 கிலோ மீட்டரில் உள்ள புதுச்சேரி எல்லையான முள்ளோடை பகுதிக்குச் சென்று தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். இதனால் முள்ளோடையில் உள்ள பெட்ரோல் பங்கில் எப்போதும் கூட்டம் அதிகமாக உள்ளது.