பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பா.ஜ.க அரசுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பும் ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் பொருள்களை ஜி.எஸ்.டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்துவருகின்றன. நேற்று, காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பந்த் நடைபெற்றது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பா.ஜ.க கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள். பெட்ரோல், டீசல் பொருள்களை ஜி.எஸ்.டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது? கச்சா எண்ணெய் விலை $107 ஆக இருந்தபோது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை $ 78 ஆக இருக்கும்போது விலை உயர்வு! ஏன்?' என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!