வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (11/09/2018)

கடைசி தொடர்பு:14:15 (11/09/2018)

அண்ணா அறிவாலயத்தில் வைக்கத் தயாராகும் கருணாநிதியின் முழு உருவச்சிலை!

கருணாநிதி சிலை

மறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் உருவச்சிலை விரைவில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் சிலை அறிவாலயத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள நிலையில், அதற்கு அருகிலேயே கருணாநிதியின் முழு உருவச் சிலையும் அமையவுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் கருணாநிதியின் சிலையை வடிவமைத்துள்ளார். சிலை தயாரிப்பு பணியை இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். சிலை தயாரிப்பு பணிகள் முழுமையடைந்த பிறகு சிலை திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட உள்ளது.