`ஏழுபேர் விடுதலையில் ஆளுநரின் நிலைப்பாடு என்ன?’ - விவரிக்கும் பா.ஜ.க பிரமுகர் | this is the governer decision on Rajiv gandhi assaination case seven maember realese says bjp source

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/09/2018)

கடைசி தொடர்பு:16:00 (11/09/2018)

`ஏழுபேர் விடுதலையில் ஆளுநரின் நிலைப்பாடு என்ன?’ - விவரிக்கும் பா.ஜ.க பிரமுகர்

 சிறையில் வாடும் ஏழு பேர்

ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,நளினி உள்ளிட்ட  ஏழுபேரின் விடுதலை  தொடர்பான விவகாரம், தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம்  சமீபத்தில் கூறியிருந்தது. அதையடுத்து, கடந்த 9 -ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,நளினி உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலைக்கான தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு பரிந்துரைசெய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

 இந்த ஏழு பேரையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கையில் ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஏழுபேரையும் விடுதலை செய்வதற்கான முடிவில் மத்திய அரசின் ஆலோசனையின்படியே ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இந்த நிலையில், "இந்த ஏழு பேரின் விடுதலையில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன... ஆளுநர் என்னமுடிவு எடுப்பார்" என்று மத்திய அரசுடன் தொடர்பில் உள்ள பி.ஜே.பி பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, "அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மட்டுமே வைத்துள்ளார்கள். அமைச்சரவையில் இருந்து கூட்டாகச் சென்று ஆளுநரைப் பார்த்து வலியுறுத்தவோ அல்லது இதுகுறித்துப் பேசவோ இல்லை. அப்படி இருக்கையில், தமிழக அரசின் இந்த முடிவை முழுமையாக ஆளுநர் ஆதரிப்பார் என்று கூற முடியாது. 

மேலும், அந்த ஏழுபேரை விடுவிக்கும் நிலைப்பாட்டில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை என்றே தெரிகிறது. ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவர், மத்திய அரசின் முடிவைப் பெறுவது என்பது விதிமுறை. அந்த அடிப்படையில் மத்திய அரசு என்ன  முடிவு சொல்கிறதோ அதனையே ஆளுநர் எடுப்பார். ஆனால்,  மத்திய அரசு ஆளுநருக்கு எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. இன்றுதான் ஆளுநர் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதைப் படித்துப்பார்த்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க உள்ளார். அதன் பின்னரே மத்திய அரசுடன் பேசுவார். ஒன்று, இந்த விவகாரத்தை இழுத்தடிக்கும் வேலைகளைச் செய்யலாம் அல்லது விடுதலைக்கு எதிரான முடிவாக இருக்கலாம்" என்றார். 

 


[X] Close

[X] Close