கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில், 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளியைப் போலீஸார் கைது செய்தனர்.

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி

கோவையில் 1998-ம் ஆண்டு  நடந்த குண்டு வெடிப்பை யாருமே மறக்க மாட்டார்கள். 58 பேர் உயிரிழந்த கோர சம்பவம் அது. இந்த வழக்கில், கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் நோகு ரஷீத் என்ற மாங்காவு ரஷீத். இவர் கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். இவரை சுமார் 20 ஆண்டுக்காலமாகப் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இவர் மீது பெரியகடைவீதி பி1 காவல் நிலையத்தில், வெடிபொருள் உபகரணச் சட்டம் 1908, பிரிவு 25 (1-பி)(ஏ) ஆயுதச்சட்டம் 1959, பிரிவு 4 பொது சொத்துகளை சேதப்படுத்தும் சட்டம் 1992 எனப் பல்வேறு பதிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடப்பட்டு வந்த குற்றவாளியான இருந்த இவர், வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ரஷீத் டெல்லியிலிருந்து சென்னை வரும்போது, சி.பி.சி.ஐ.டி சிறப்புப் படையினர் துப்பாக்கிமுனையில் அவரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து, கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வருகின்ற 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!