'டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்..!' - 125 ஆண்டுகளைக் கடந்த விவேகானந்தரின் சொற்பொழிவு

இந்தியாவின் பெருமையையும், இந்து சமயத்தின் புகழையும் உலகம் முழுவதும் பரவச் செய்தவர்களில் முக்கியமானவர், சுவாமி விவேகானந்தர். விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுதான் இந்தியாவைப் பற்றிய உலக மக்களின் பார்வையை மாற்றச்செய்தது. ஆன்மிக மாநாட்டில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும், 'சீமான்களே... சீமாட்டிகளே...' என்று உரையைத் தொடங்கிப் பேச, 'அமெரிக்க சகோதரர்களே, சகோதரிகளே' என்று சகோதரத்துவத்துடன் தொடங்கி, தனது புகழ்பெற்ற சொற்பொழிவை விவேகானந்தர் ஆற்றிய நாள், 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்பொழிவு நடந்து, இன்றோடு 125 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

விவேகானந்தர்

"பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம்" என்று கூறி, இந்திய மக்களின் பெருமையையும், இந்தியர்களின் சகோதரத்துவத்தையும் உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியவர் விவேகானந்தர். 

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு ஆற்றப்பட்டு 125 ஆண்டுகள் முடிந்திருப்பதன் விழா, ராமகிருஷ்ண மடம் சார்பில் உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராமகிருஷ்ண மடம் மற்றும் நாமக்கல் ராமகிருஷ்ண ஆஸ்ரம மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் ஏற்கெனவே நடத்தப்பட்ட நிலையில், இன்று பரிசளிக்கப்படுகிறது. இந்த நாளில் விவேகானந்தரையும் அவர் ஆற்றிய சொற்பொழிவையும் நினைவுகூர்வோம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!