''மிரட்டுகிறார் அமைச்சர் வேலுமணி!’’ பெண் பத்திரிகையாளர் புகார்

வேலுமணி

னியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று, 'கோயம்பத்தூரைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது உறவினர்களின் நிறுவனங்களுக்கே அரசு சார்ந்த டெண்டர்களை வழங்குகிறார்' என்ற செய்தியை சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரான கோமல் கெளதம், மிரட்டல்களுக்கும் தகாத குறுஞ்செய்திகளுக்கும் ஆளாகிவருகிறார். மேலும், அந்தத் தனியார் செய்தி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாசிரியர் மயில்வாகனனைத் தொடர்புகொண்ட கான்ட்ராக்டர் சந்திரபிரகாஷ் , கோமல் பற்றி தவறாகப் பேசியிருக்கிறார். இதனால், சென்னை காவல்துறை ஆணையரிடம் கோமல் மற்றும் மயில்வாகனன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

''அமைச்சர் வேலுமணியைப் பற்றி எங்கள் செய்தித் தொலைக்காட்சியில் வெளியிட்டோம். இந்தக் குற்றச்சாட்டில், கே.சி.பி இஞ்ஜினீயரிங் நிறுவனம், கன்ஸ்ட்ரொனிக்ஸ் மற்றும் வர்த்தான் இன்ஃப்ராஸ்ட்ரெக்‌சர் ஆகிய நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. கடந்த 7-ம் தேதி, 8 மணியளவில், கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர் சந்திரபிரகாஷ், எங்கள் நிறுவனத்தின் சக  ஊழியரும் மூத்த செய்தியாளருமான கோமல் கெளதமுக்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி குறுஞ்செய்திகள் அனுப்பினார். பணத்துக்காகவே இப்படியான செய்திகளை வெளியிடுவதாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். மேலும், செப்டம்பர் 8-ம் தேதி, எங்கள் செய்தி நிறுவனத்தின் கோயம்புத்தூர் தலைமைப் பொறுப்பாசிரியர் வி.மயில்வாகனனிடமும் கோமல் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார்.

வேலுமணி

ஏற்கெனவே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரரான அன்பரசு மற்றும் கான்ட்ராக்டர் சந்திரபிரகாஷ் பற்றி செய்தி வெளியிட்டதற்காக, எங்கள் நிறுவனம், செய்தி ஆசிரியர், சம்பந்தப்பட்ட தலைமைச் செய்தி நிருபர் மீது மானநஷ்ட வழக்கு பதிவுசெய்துள்ளனர். இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்'' என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!