``சீமான் மோசம்... மோடி ஆவ்சம்!’’ - விசு | Actor visu speaks about various issues

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (11/09/2018)

கடைசி தொடர்பு:18:28 (11/09/2018)

``சீமான் மோசம்... மோடி ஆவ்சம்!’’ - விசு

``சீமானுக்கெல்லாம் பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை" என்று நடிகர் விசு கூறினார்.

விசு

சமீபத்தில் இயக்குநரும் நடிகருமான விசுவிடம் எடுத்த நேர்காணலில், மாணவி ஷோபியா விமான நிலையத்தில் செய்த முழக்கம் குறித்துக் கேட்டபோது, `ஷோபியா செய்தது தவறு' எனக் கூறிய விசு, ஷோபியாவுக்கு ஆதரவாகப் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். `ஷோபியாவுக்கு ஆதரவாகப் பேசிய இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வேன். ஆனால், சீமான் மாதிரியானவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது' என்றார்.

சீமானுக்கு மட்டும் பதில் சொல்லவில்லை என்பதற்கு பிரத்யேகமான காரணம் இருக்கிறதா எனக் கேட்டபோது, "சீமான், எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில்கூட வாட்ஸ் அப்பில் அவர் பேசியதைக் கேட்டேன். அவருக்கெல்லாம் பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை" என்ற விசு, `மோடியின் நான்கரை ஆண்டுக்கால ஆட்சியைப் பற்றிதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்' என்றார்.

"உள்நாட்டில் மிக பாதுகாப்புடன் அமைதியான ஆட்சியை மோடி நடத்திக்கொண்டிருக்கிறார். நம்மை அச்சுறுத்தக்கூடிய சக்திகளை எல்லாம் தள்ளி நிற்க வைத்திருக்கிறார். இப்படி பல விஷயங்களை சொல்லலாம். அவர் செய்த சாதனைகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் டிமானிடைசேஷனைச் சொல்லுவேன்" என்றார்.